முனைப்பின் மாணவர் வள மேம்பாட்டுத்திட்டம் ஒரு மில்லியன் செலவில் கற்றல் உபகரணங்கள்.
மட்டக்களப்பு,திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் வள மேம்பாட்டுத்திட்டத்தினை முனைப்பு நிறுவனம் அமுல்படுத்தியுள்ளது. இதற்கென முதற்கட்டமாக ஒரு மில்லியன் ரூபா செலவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட ஆரம்பக்கல்விப்பிரிவில் கல்வி பயிலும் தமிழ் ,முஸ்லிம் மாணவர்கள் 5000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் மூன்று மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முனைப்பு நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா வலயமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செங்கலடி மத்திய கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏறாவூர் பற்று கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோட்டக்கல்வி அதிகாரி எம். சுபைர் உட்பட பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் முனைப்பு நிறுவனம் ஏற்கனவே உணவுப்பொருட்கள், பால்மா, மருந்துப்பொருட்கள் உட்பட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment