Tuesday, March 8, 2011

சிறிதரன் மீது அரசு கொலை முயற்சியா?

கேட்கிறவன் கேணையன் என்றால் கேப்ப இலையிலையும் பால்வடியுமாம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சிறிதரன் மீது அனுராதபுரம் நொச்சியாகம பிரதேசத்தில் வைத்து கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் , அவர் மசிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகவும் அவரது சகோதரன் செய்தி வெளியிட அதை தொடர்ந்து ஊடகங்கள் பலவும் அச்செய்தியை மீள்பிரசுரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அச்செய்திகளில், சொச்சியாகம பிரதேசத்தில் சிறிதரன் பயணம் செய்து கொண்டிருந்த போது இலக்க தகடுகள் அற்ற வெள்ளநிற வாகனத்தில் காத்திருந்த 3-4 பேர் கொண்ட குழுவொன்று கிரேனேட் தாக்குதலை நடாத்தி விட்டு எம்பி யை கொலை செய்யும் நோக்கில் துரத்தி துரத்தி பிஸ்டல்களால் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


எம்பி யின் வரவிற்காக காத்திருந்த கொலை முயற்சியாளர்கள் ஓடுகின்ற வாகனத்தின் மீது கிரனேட் தாக்குலை மேற்கொண்டுவிட்டு விரட்டி விரட்டி பிஸ்டல்களால் சுட்டார்கள் என்ற செய்தி இந்திய தமிழ் படக்காட்சிகளை நினைவூட்டுவதாகவே அமைந்துள்ளது. இலங்கை பாதுகாப்பு தரப்பாக இருந்தால் என்ன புலிகள் உட்பட்ட தமிழ் ஆயுதக்குழக்களாக இருந்தாலென்ன திட்டமிட்ட கொலைகளை செய்வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே . இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்டோரது இலக்கு சிறிதரனை கொலைசெய்வதாக இருந்திருந்தால் அதை எவ்வாறு நடாத்தி முடித்திருப்பார்கள் என்பதை இலங்கையில் வாழுகின்ற மக்களுக்கு நாம் சொல்லி தெரியவில்லை. (புலன்பெயர்ந்த தமிழருக்கு புதிதாக அமையலாம்)

பா.உ சிறிதரன் ரி56 ரக ஆயுதங்கள் தாங்கிய பொலிஸ் பாதுகாப்புடன் செல்கையில் கிரனேட் தாக்குலை மேற்கொண்டவர்கள் வானுக்கு பின்னால் பிஸ்டல்களால் சுட்டுக்கொண்டு துரத்திச் சென்றார்கள் என சிறிதரனால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவலே இச்சம்பவமானது சிறிதரனின் இலங்கை அரசுடனிணைந்த திட்டமிட்ட நாடகம் என்பதை உறுதிசெய்வலியுறுத்துகின்றது. பாதுகாப்பு அதிகாகரிகள் ரி 56 ரக துப்பாக்கிகளை வாகனத்தில் வைத்திருக்கும்போது கைத்துப்பாக்கிகளுடன் தாக்குதல்தாரிகள் துரத்துவது ஏற்கனவே ஒத்திகைபார்க்கப்பட்டு அரங்கேறிய நாடகம் என்பதையும் உணர்த்துகின்றது.

நொச்சியாகம பிரதேசத்தில் வைத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதால் அதை இலங்கை அரசாங்கமே செய்யவேண்டும் என வேறு பா.உ கூறுகின்றார். ஆனால் பா.உ சிறிதரனை கொலைசெய்யவேண்டிய தேவை அரசிற்கு இல்லை என்பதை வன்னி மக்கள் அறிவார்கள். இடைத்தங்கல் முமாமொன்றில் தங்கியிருந்த சிறிதரன் பாதுகாப்பு தரப்பினருடன் எவ்வாறான உறவினை பேணினார் என்பதும் என்னநோக்கத்திற்காக அவர் த.தே.கூ இணைந்து கொண்டார் என்பதும் வன்னிமக்கள் அறிந்த உண்மையாகும். அரசுடன் இரகசிய உடன்படிக்கையுடன் அரசின் நிகழ்சி நிரலின்கீழ் செயற்பட்டுவரும் பா.உ சிறிதரன் தனது போலிவேஷசம் கலையும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்தவுடன் தமிழ் மக்களின் தலையில் பூச்சுத்துவதற்காக அரசுடன் இணைந்து மேற்கொண்ட நாடமே இதுவென நம்ப த்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

நடைபெறவுள்ள தேர்தலில் முல்லைதீவு , கிளிநொச்சி பிரதேசங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல் செய்கையில் அரசின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் அவற்றை திட்டமிட்டபடி நிராகரிக்க செய்த சிறிதரனின் உண்மை முகம் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு போலி இனவாதத்தை கக்கும் இவர் வன்னி மக்களின் பெயரால் மிக பெருமளவு பணமோசடியை புலம்பெயர் தமிழர்களிடம் மேற்கொண்டுள்ளதுடன் அவற்றை அரசு அறிந்திருந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தியில் வன்னி மக்கள் உள்ளதாக அறியமுடிகின்றது.

2 comments :

kasi ,  March 9, 2011 at 1:20 PM  

It is true.You have explained well what happened actualy.

Anonymous ,  March 10, 2011 at 11:31 PM  

Its a game of Lankasri and Tamilwin to do propaganda against Sri Lanka.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com