Thursday, March 10, 2011

நிவாரணம் கோரி யாழ் முஸ்லிம்கள் சாகும்வரை உண்ணாவிரதம்.

1990 ம் ஆண்டு புலிகளியக்கத்தினரால் விரட்டியடிக்கப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் அவ்வியக்கம் அழித்தொழிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வடபகுதியில் குடியேறியுள்ளனர். இவ்வாறு குறியேறியுள்ளவர்களில் ஒருபகுதியினர் தற்போது தமக்கு இலங்கை அரசாங்கம் அன்றாட வாழ்கைத்தேவைக்கான நிவாரணத்தினை வழங்கவேண்டும் என சாகும்வரை உண் ணாவிரதப் போராட்டும் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

யாழ். புதிய சோனக தெரு தொம்மவெளி குடியிருப்பு பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மேற்கொண்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை கடந்த செவ்வாய்கிழமை ஆரம்பித்த அவர்கள் அது பலனிளிக்காத நிலையில் இன்று காலை 9 மணியளவில் அதே குடியிருப்பை சேர்ந்த எம்.ஆர்.நவூசாத் என்பவர் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது சொந்த இடங்களுக்கு வந்த போது அவர்களது அனைத்து உடமைகளும் அழிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த நிலையில் அரசோ, அரச சார்பற்ற நிறுவனமோ எதுவித நிவாரண உதவிகளையும் மேற்கொள்ளவில்லை என உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நிவாரண உதவி கிடைக்கும் வரையில் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாகவும், இவ்வுண்ணாவிரதத்தால் என் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் தனக்கு பின் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள பலர் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


1 comments :

Anonymous ,  March 10, 2011 at 3:58 PM  

யாழ்ப்பாணம் திரும்பி செல்ல முடியாது. புத்தளத்தில் தொடர்ந்தும் வாழவிரும்புகிறோம் என்று கூறிக்கொண்டு அரசாங்க, மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொண்டு இருந்தவர்கள் இப்போ தீடிரென அங்கு சென்று மீண்டும் அரசாங்கத்தின் உதவியை நாடி நிற்பது சந்தர்ப்பவாதம்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com