Tuesday, March 8, 2011

சரத் பொன்சேகாவின் இடத்திற்கு புதிய பா.உ வாக ஜயந்த கெட்டகொட

இராணுவ நீதிமன்றத்தினால் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். இவரது இடத்திற்கு விருப்பு வக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையிலிருந்த ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையிலிருந்த நிப்புணாராட்சியின் பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால் இராணுவ நீதிமன்றின் தீர்பினை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாநாயக தேசிய முன்னணி அறிவித்ததுடன் அவர் பதிவி ஏற்பதையும் தவிர்த்துவந்தது. அரசியல் யாப்பின் பிரகாரம் வர்த்தமானியில் பிரசுரமாகி 3 மாத ங்களுள் ஒருவர் பதவி பிரமாணம் செய்யாத போது அவர் பதவியினை இழக்கின்றார். ஆதன் அடிப்படையில் நிப்புணாராட்சிக்கு அடுத்த விருப்பு வாக்குகளை பெற்ற ஜயந்த கெட்டாகொட பதவிக்கு தகுதியானார்.

இவரும் பதவியேற்காமல் இருப்பின் அடுத்த விருப்பு வாக்குகளை பெற்ற சரத் மனமேந்திரா பதவிக்கு தகுதியானவர் அவார். புதிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவாரான இவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசுடன் இணைந்து கொண்டுள்ளார் இந்நிலையில் பா.உ பிரதிநிதித்துவம் இவரிடம் செல்வதை தவிர்கும் பொருட்டே ஜயந்த கெட்டகொட பதவி ஏற்றதாக தெரியவருகின்றது.

சரத் பொன்சேகாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு தன்னுடைய பெயர் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பதவி வெற்றிடம் வேறு எவராலும் பறிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தான் பதவியேற்கவுள்ளதாக அவர் ஊடகங்களுகு;கு தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com