இந்தியாவின் ஆதரவைக் கேட்கும் கடாபி!!
லிபியாவில் கலவரக்காரர்களுக்கபு எதிராக ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், காஷ்மீரில் இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்றதே. எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மொம்மர் கடாபி.
லிபியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முக்கிய நகரங்களைப் பிடிக்கும் முயற்சியை வெளிநாடுகளின் துணையுடன் தொடர்கிறார்கள். ஐநா சபை, ஐரோப்பிய நாடுகள், சில ஆப்ரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களை வெளிப்படையாக ஆதரிக்கின்றன.
இவர்களை அடக்க போர்விமானங்களையும் பீரங்கிகளையும் பயன்படுத்தி வருகிறார் அதிபர் கடாபி. அமெரிக்கா அல்லது ஐநா தலையிட்டால் ரத்த ஆறு ஓடும் என எச்சரித்துள்ளார்.
இதுவரை நடந்த கலவரத்தில் 6000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க மீடியா செய்தி பரப்பு வருகிறது. எனவே கடாபியை சர்வதேச நீதிமன்றத்தில் கிரிமினல் குற்றவாளியாக நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன இங்கிலாந்தும் அமெரிக்காவும். அவர் மீது ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு ஆதரவு தேடும் முற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார் கடாபி.
கடந்த வாரம் நடந்த லிபிய தேசிய நாள் கொண்டாட்டத்தின்போது 5 மணிநேரம் பேசினார் கடாபி. தனது பேச்சின் போது, "காஷ்மீரில் தீவிரவாதிகளை ஒடுக்க இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளைப் போன்றதுதான், லிபியாவில் அரசுக்கு எதிரானவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையும். எனவே இந்தியா தன்னை ஆதரிக்க வேண்டும்", என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அவர் கடந்த வாரம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி லிபியாவுக்கு எதிரான ஐநா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் எதிர்காலத்தில் தங்களது எண்ணெய் வர்த்தக ஒப்பந்தம் அனைத்தையும் இந்திய மற்றும் சீன நிறுவனங்களுக்கே தரப்போவதாகவும் அவர் கூறினார்.
லிபியாவில் 3 ஹாலந்து நாட்டு கடற்படையினர் சிறை பிடிக்கப்பட்டனர்.
லிபியாவில் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த 3 கடற்படை வீரர்களை ஆயுதம் தாங்கிய சிலர் சிறை பிடித்துச்சென்றிருப்பதாக ஹாலந்து நாடு தெரிவித்துள்ளது. லிபியாவிலிருந்து தத்தமது நாட்டு மக்களை ஒவ்வொரு நாடும் பல்வேறு வழிகளில் மீட்டுக் கொண்டிருக்கின்றன. அதன்படி ஹாலந்து நாடும் தனது மக்களை அங்கிருந்து மீட்டு வருகிறது. இதற்காக தனது நாட்டு ராணுவ வீரர்களையும் அது மீட்புக் குழுவினருடன் அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில் 3 ஹாலந்து கடற்படை வீரர்களை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று துப்பாக்கி முனையில் பிடித்துச் சென்று விட்டதாக ஹாலந்து கூறியுள்ளது.
இதுகுறித்து ஹாலந்து நாட்டு கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 3 வீரர்கள் பிடிபட்டிருப்பது உண்மைதான். இவர்கள் மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள். இவர்களை அதிபர் கடாபியின் விசுவாசத்திற்கு ஆட்கள்தான் பிடித்துச் சென்றிருப்பதாக அறிகிறோம். சிர்டி என்ற இடத்திலிருந்து இந்த மூன்று வீரரும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
சிர்டி பகுதியில் சிக்கியிருந்த ஹாலந்து மற்றும் ஐரோப்பிய நாட்டவர்களை மீட்க அங்கு ஹெலிகாப்டரில் இந்த மூன்று வீரர்களும் சென்றிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த ஆயுதம் தாங்கிய நபர்கள் ஹெலிகாப்டரிலிருந்து
0 comments :
Post a Comment