Tuesday, March 1, 2011

இந்தியாவில் பிடிபட்ட மீனவர்கள் அறுவரும் விடுதலை.

இந்திய கடல் எல்லையில் அத்துமீறி பிரவேசித்தார்கள் என்ற பேரில் கைதுசெய்யப்பட்ட 6 மீனவர்களை விடுவிக்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. இவர்கள் 6 பேரும் நாளை இலங்கை வந்தடைவார்கள் எனவும் இவர்களை வானுர்தி முலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர்
தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய ஆந்திரபிரதேசத்தில் தடுத்து வைத்துள்ள 8 மீன்பிடிபடகுகளையும் 43மீனவர்களையும் எதிர்வரும் 4ம் திகதி இலங்கை-இந்திய கடல் எல்லையில் வைத்து இலங்கை கடலோர காவல் படையிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com