94 ல் 34 பா.உ க்களை கொண்டிருந்த ஜே.வி.பி க்கு வந்த நிலை. விமல் கிண்டல்.
நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்துள்ள முடிவுகள் தோல்வியை பெற்றுக்கொடுத்துள்ளது. நாடளாவிய ரீதியில் 234 மன்றுகளுக்காக இடம்பெற்ற தேர்தலில் ஜேவிபி க்கு எந்தவொரு மன்றையும் கைப்பற்ற முடியாமல்போயுள்ளதுடன், 57 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது.
இம்முடிவுகள் தொடர்பாக அக்கட்சியிலிருந்து பிரிந்து சென்று அரசில் அமைச்சராகவுள்ள விமல் வீரவன்ச கேலி செய்துள்ளார். 94 ம் ஆண்டு சந்திரிகாவுடன் இணைந்து 34 பாராளுமன்று உறுப்பினகளைப் பெற்றுக்கொண்ட கட்சிக்கு இன்று ஒரு உள்ளுராட்சி சபையைக்கூட கைப்பற்றமுடியாது போயுள்ளது எனவும், கடந்த பல ஆண்டுகளாக தன்னகத்தேயே வைத்திருந்த திஸ்ஸமஹாராமகம உள்ளுராட்சி சபையையும் இழந்து நிற்கின்றது எனவும் கேலி செய்துள்ள அவர், அம்மன்றை இழந்தது மடுமல்லது எதிர்கட்சியைக்கூட கைப்பற்ற முடிந்திருக்கவில்லை எனவும் எதிர்கட்சியை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளதாகவும் ஜேவிபி ஒரு ஆசனத்தையை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம் தேர்தல் முடிவுகள் தொடர்பாக விளக்கும் பொருட்டு ஊடகவியலாளர்கள் மாநாடு ஒன்றை கூட்டிய ஜேவிபி மக்கள் தற்காலிக தீர்வினையே எதிர்நோக்கி நிற்பதாகவும், ஒரு நீண்ட தொலைநோக்கு அற்றவர்களாக அரசினை ஆதரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அத்துடன் இத்தேர்தலில் அதிகூடிய கூட்டங்களை தமது கட்சியே நடாத்தியிருந்தாகவும், மக்களுக்கு நிலைமைகளை விளக்கும்பொருட்டு அதிகூடிய மக்கள் தொகையை தமே சந்தித்திருந்தாகவும் தெரிவித்துள்ள கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மக்கள் நிலைமைகளை விளங்கிக்கொள்ள மறுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment