Saturday, March 12, 2011

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குத் தப்ப முயன்ற 58 பேர் கைது

படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்ல முற்பட்ட 58 பேர் நீர்கொழும்பு மற்றும் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 40 ஆண்களும் 12 பெண்களும் 6 குழந்தைகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீர்கொழும்பு மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேச விடுதிகளில் தங்கியிருந்தபோதே பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச் செல்ல முற்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக செல்லமுற்பட்ட படகை சிலாபத்தில் பொலிஸார் கைப்பற்றியுள்ள அதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு ஒவ்வொருவரும் தலா 4 இலட்சம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com