புலிகள் 2002 லிருந்து 2009 வரை மிரட்டி பணம் பறித்தார்கள். நோர்வேத் தமிழர் வழக்கு.
புலிகளியக்கத்தினர் 2002ம் ஆண்டுப் பகுதியில் தனது வீட்டிற்கு வந்து கொலைமிரட்டல் விடுத்து 2009ம் ஆண்டுவரை பலவந்தமாக பணம்பறித்தாக நோர்வேவாழ் இலங்கைத் தமிழர் ஒருவர் நோர்வேயில் புலிகளியக்கத்தினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடராஜா சேதுரூபன் வயது 33, வடமராட்சி பருத்திதுறை பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் பதிவு செய்துள்ள வழக்கில் நோர்வே நாட்டுக்கான தலைநகரான ஒஸ்லோவில் புலிகளுக்கான நிதிப்பொறுப்பாளர் பாலன் பிரதிவாதியாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ரிஆர்ஒ அமைப்பு, புலிகளின் தலைமையகம் என பேசப்படுகின்ற ரிசிசி எனப்படும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, புலிகளின் பாராளுமன்று என பேசப்படுகின்ற ஈழத்தமிழரவை போன்ற அமைப்புக்கள் இக்கொலைமிரட்டல் பணவசூலிப்புக்கு உடந்தைகளாக இருந்து வந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள விசேட குற்றப் புலனாய்வு பிரிவில் நேற்று 23.03.2011 இல் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தனது வங்கியிலிருந்து புலிகளின் வங்கிக் கணக்குக்கு நிதி பரிமாறப்பட்டமைக்கான ஆதாரமும், நிதியினை புலிகள் பெற்றுக்கொண்டதாக புலிகள் வழங்கியிருந்த பற்றுச்சீட்டுக்களும் ஆதாரங்களாக பொலிஸாரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக வழக்காளிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
நோர்வேயில் பணம்தர மறுத்தால் இலங்கையில் உங்கள் உறவினர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என சேதுரூபனிடம், புலிகளின் நிதிப்பொறுப்பாளர் பாலன் தெரிவித்ததான ஒலிப்பதிவுகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் கூறுகின்றது.
முறைப்பாட்டில் புலிகள் தன்னிடம் பெற்றுக்கொண்ட முழுப்பணத்தையும் பெற்றுத்தருமாறு சேதுரூபனால் வேண்டப்பட்டுள்ளது.
சேதுரூபனின் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமையை உறுதிப்படுத்தும் பற்றுச்சீட்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
1 comments :
அண்ணா, எங்களுக்கும் இதே பிரச்சனை தான்.
தயவு செய்து உங்கள் அறிவுரைகளை விபரமாக வெளியிடுங்கள்.
நாங்களும் அந்த நாயிகளுக்கு எதிராக வழக்கு போட்டு எங்கட பணத்தை திருப்பி எடுக்க வேண்டும்.
இன்று உலகெங்கும் நாயிகள் எங்களின் பணத்தில் சொத்து சுகத்துடன் சொகுசாக வாழுதுகள்.
நாங்களோ அன்றிலிருந்து இன்றுவரை தினமும் மாடாய் உழைத்து மாயகின்றோம்.
Post a Comment