கிபீர் விமானங்கள் 2 மோதிச் சிதறின.
இலங்கை விமானப்பிடையின் 60ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு சாகச பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு கிபீர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. கம்பஹா வரான பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பெரும் தீப்பிளம்புடன் விமானம் தரையை வந்தடைந்ததுடன் பிரசதேசத்திலுள்ள ஒருசில வீடுகளும் சிறு சேத்திற்குள்ளாகியும் பிரதேசவாசியொருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
விபத்தில் ஒரு விமானி உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். விபத்தில் ஸ்கோட்ரன் கெப்டன் வஜிர ஜயகொடி உயிர் தப்பியதுடன், விமானி லெப்டினன் மொனத் பெரேரா உயிரிழந்துள்ளார். உயிர் தப்பிய விமானி பரசூட் மூலம் விமானத்திலிருந்து குதித்து தப்பியுள்ளார்.
0 comments :
Post a Comment