ஜப்பான் சுனாமி: அணுஉலை வெடித்ததில் பெரும் பாதிப்பு. உயிரழந்தோர் தொகை 1300 க்கு மேல்
சுனாமியின் காரணமாக, ஜப்பானின் அணு உலை ஒன்று சனிக்கிழமை வெடித்துச் சிதறியதில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. வடகிழக்கு ஜப்பானின் ஃபுகுஷிமாவில் உள்ள இந்த அணு உலையில் வானாளவிய புகை மண்டலம் காணப்படுகிறது.
அணு உலையின் பணியாளர்கள் பலரும் காயமடைந்துள்ளதாக ஜப்பானிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தப் பாதிப்பின் தொடர்ச்சியாக, அணு உலையில் இருந்து கதிர்வீச்சுகள் அதன் சுற்று வட்டாரத்தில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, அணு உலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றி 10 கிலோமீட்டர் தூரத்தில் வசித்த மக்களை அப்புறப்படுத்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அணு உலை வெடிப்பின் தீவிரத்தின் காரணமாக, அந்தத் தொலைவு 20 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளால் உயிர்ச் சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தகவல் இல்லை.
அணு உலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் வடகிழக்கு ஜப்பானில் சுனாமிப் பேரலை தாக்கியதின் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது. இலங்கைநேரப்படி நேரப்படி சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, ஏறத்தாழ 800 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியதாக ஜப்பானிய ஊடகச் செய்திகள் தெரிவித்தன. 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
செண்டாய் நகர் பகுதியில் மட்டும் இதுவரை 400-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பேரழிவால், ஜப்பானின் வடகிழக்குப் பகுதிகளில் இருந்து 2,15,000 பேர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து உள்நாட்டு அகதிகளாகியுள்ளதாக காவல்துறை மதிப்பிட்டுள்ளது.
தற்போது, சுனாமிப் பேரலையால் வீடுகளையும் கட்டடங்களையும் சூழ்ந்த தண்ணீர் வடிந்து வரும் நிலையில், மாடிகளின் மேற்கூரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஜப்பான் சுனாமி... செய்தித் துளிகள்
ழூ ஜப்பானில் இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் இது.
ழூ வடகிழக்கு கடற்கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரம் கொண்ட சுனாமி அலைகள் தாக்கின.
ழூ கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவு.
ழூ செண்டாய் நகரில் ஒரே நாளில் 300 சடலங்கள் மீட்பு.
ழூ ஏறத்தாழ 400 பேர் காணவில்லை என்கிறது ஜப்பான் போலீஸ்.
ழூ ஒட்டுமொத்த அழிவை மதிப்பீடு செய்வது இப்போதைக்கு மிகக் கடினம் என்கிறார்கள் நிபுணர்கள்.
ழூ சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது.
ழூ பகுஷிமா டேய்சி அணு உலை பாதித்ததால் மூடப்பட்டது. அந்தப் பகுதியில் இருந்த சுமார் 2000 பேர் வெளியேற்றம்.
ழூ மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலையில் தீ விபத்து.
ழூ தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரிக்கை.
ழூ பசிபிக் கடல் பகுதி நாடுகளில் சுனாமி எச்சரிக்கை. ஹவாய் தீவுகளை குறைந்த மீட்டரில் சுனாமி எழுந்ததால் பாதிப்பில்லை.
ழூ லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலியிலும் சுனாமி எச்சரிக்கை.
டோக்கியோவில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் பசிபிக் கடலுக்கு அடியில் 20 மைல்கள் ஆழத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கடுமையான பூகம்பம், ரிக்டர் அளவில் 8.9 ஆக பதிவாகியிருந்தது.
கடலில் எழுந்த சுனாமிப் பேரலைகள் கப்பல்கள், கட்டடங்கள் என அடித்து துவம்சம் செய்தபடி நிலப் பகுதிகளை கடுமையாகத் தாக்கியது. இந்த சுனாமி தாக்குதலுக்கு கடற்கரைப் பகுதியான செண்டாய் மிக அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் தொடர்ச்சியாக ரஷ்யா, தைவான், இந்தோனேஷியா, ஹவாலி, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டு வரும் சுனாமி காட்சிகள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சுனாமிப் பேரழிவால், ஜப்பான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சேதம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பசிபிக் கடலில் இருந்து எழும்பிய சுனாமிப் பேரலைகள் 13 அடி வரை மேலெழுந்து ஜப்பானின் கடலோர நகர் பகுதிகளைத் தாக்கியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும் வீடுகளும் வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. அணு உலை நிலையங்கள், முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
டோக்கியோ, ஒசாகி, கியோடோ உள்ளிட்ட நகர்களில் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை , இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை இல்லை என்றும், இந்தியாவுக்கு ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பேரழிவு பூகம்பங்கள்...
* ஜூலை 27,1976, தாங்ஷான், சீனா, பலி - 6,55,000 - ரிக்டர் 7.5
* டிச.26, 2004, சுமத்ரா, இந்தோனேஷியா, பலி - 2,27,898 - ரி9.1
* ஜன.12, 2010, ஹைத்தி, பலி - 2.22,570 - ரி7.0
* மே 12, 2008, சிச்சுவான், சீனா, பலி - 87,587 - ரி7.9
* அக்.8,2005, பாகிஸ்தான், பலி - 80,361 - ரி7.6
* மே 31, 1970 சிம்போத், பெரு, பலி - 70,000- ரி7.9
* ஜூன் 20, 1990, மஞ்சில், ஈரான், பலி - 40,000, ரி7.4
* டிச.26, 2003, பாம், ஈரான், பலி - 31,000, ரி6.6
* ஜன.26, 2001, குஜராத், இந்தியா, பலி - 20,023, ரி7.7
* ஆக.17 1999, இஸ்மித், துருக்கி, பலி - 17,118, ரி7.6
* செப்.30, 1993 லதூர், இந்தியா, பலி - 9,748, ரி6.2
* ஜன. 16, 1995, கோபே, ஜப்பான், பலி - 5,530, ரி6.9
0 comments :
Post a Comment