Saturday, February 12, 2011

பாக்கிஸ்தானில் இருவரைச் சுட்டுக்கொன்ற அமெரிக்க தூதரக அதிகாரிக்கு சிறை.

US - Pak உறவில் விரிசல்.
பாகிஸ்தானின் லாகூர் நகரில், கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் சென்ற காரை வழிமறித்து சிலர் கொள்ளையடிக்க முயன்றனர். அவர்களை தூதரக அதிகாரி ரேமாண்ட் டேவிஸ் சுட்டுக்கொன்றார். இதையடுத்து பாகிஸ்தானிய போலீசார் ரேமாண்ட் டேவிசை கைது செய்துள்ளனர். தற்காப்புக்காக தான் டேவிஸ் இவர்களை சுட்டுக்கொன்றார், எனவே, அவரை விடுவிக்க வேண்டும், என அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது.

'இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதால், டேவிசை விடுவிப்பது கோர்ட்டின் முடிவில் தான் உள்ளது'என, அதிபர் சர்தாரி தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்க - பாகிஸ்தானிய உறவில் நெருடல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ரேமாண்ட் டேவிசால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பேர், ஐ.எஸ்.ஐ., உளவாளிகள் என பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பேரின் மொபைல்போன் கேமராவில் டேவிசின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது, என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த கருத்தை அமெரிக்கா ஏற்க மறுத்துள்ளது. தூதரக அதிகாரி டேவிசை விடுவிக்காவிட்டால், பாகிஸ்தானில் உள்ள மூன்று தூதரக அலுவலகங்களை மூடப் போவதாக அமெரிக்கா, மறைமுகமாக எச்சரித்துள்ளது.

ரேமண்ட் கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ள அ மெரிக்கா வெளிநாட்டின் தூதரக அதிகாரி என்ற சலுகை அடிப்படையில் உடனே அவரை விடுதலை செய்யும்படி வலியுறுத்திவருகின்றது. ஆனால் பாகிஸ்தான் பணியவில்லை. அமெரிக்க தூதரக அதிகாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்ததும் உள்ளது.

இது அமெரிக்காவுக்கு ஆத்திரத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான தூதரக உறவை துண்டிக்க முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டாம் டோனிலான் பாகிஸ்தான் தூதர் ஹூ சைன் ஹக்கானியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பேசினார்.

அப்போது எங்கள் தூதரக அதிகாரி ரேமண்ட்டை விடுதலை செய்யாவிட்டால் உங்களை (ஹக்கானியை) அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவோம். அடுத்த மாதம் (மார்ச்) பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அமெரிக்கா வருகை தர உள்ளார். அவரது வருகையையும் ரத்து செய்வோம் என மிரட்டல் விடுத்தார்.

இந்த தகவலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஹக்கானி மறுத்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் தன்னிடம் இது போன்று மிரட்டல் விடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் மிரட்டலுடனான கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்கவில்லை.

லாகூர் மாடல் டவுன் பகுதியில் உள்ள குற்றவியல் மாஜிஸ்திரேட்டு அமெரிகக் தூதரக அதிகாரி ரேமண்ட் டேவிஸ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீண்டும் 14 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com