எகிப்தின் காற்றை இலங்கைக்கும் திருப்புவோம் என்கிறது UNP.
இலங்கை மக்கள் ஒன்றும் கீழ்தரமானவர்கள் என்கின்றார் விமல்.
சர்வாதிகார ஆட்சிகள் இடம்பெற்று வருகின்ற மத்திய கிழக்கு நாடுகளில் வீசுகின்ற மக்கள் எழுச்சி கா ற்றினை இலங்கைப் பக்கம் திருப்பு வோம் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரேலிய மாவட்ட பாராளுன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம் எகிப்தில் ஏற்பட்டுள்ள நிலை இலங்கையிலும் ஏற்படுமென சிலர் எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறான நிலையை இந்த நாட்டில் ஏற்படுத்த இலங்கை மக்கள் ஒன்றும் கீழ்தரமானவர்கள் அல்லவெனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை சுட்டிக்காட்டி இந்த நாட்டில் அவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்த சில ஊடகங்களும் முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜயவர்த்தனகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment