பிரகீத் எக்னெலியகொட தொடர்பான மனு - UN பேச்சாளரிடம் Innercity press பிறஸ் கேள்வி:
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட தொடர்பான மனுவை ஐநாவின் இலங்கை அலுவலகம் நியூயோர்க்குக்கு அனுப்பி வைத்துள்ளதாகக் கூறி இரண்டு வாரங்களின் பின்னரும் ஐநாவின் பேச்சாளர் மார்ட்டின் நேர்ஸ்கி எங்களுக்கு அந்த மனு இன்னமும் கிடைக்கவில்லை என்று கடந்த செவ்வாயன்று தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு மனுவை நாம் இதுவரை பார்க்கவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐநாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடக சுதந்திரம்; தொடர்பில் போதுமானளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் கமிட்டி உட்பட அனைவராலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
காணாமல் போன லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட தொடர்பில் பான் கீ மூனின் தலையீட்டைக் கோரி எக்னெலியகொடவின் மனைவியால் ஐநாவின் இலங்கை அலுவலகம் ஊடாக மேற்கொண்ட மனு தொடர்பில் ஐநா எந்நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பைச் சேர்ந்த பொப் டய்ட்ஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பான் கீ; மூனின் பேச்சாளர் மார்ட்டின் நேர்ஸ்கியிடம் இது பற்றி இன்னர் சிற்றி பிரஸ் கேட்ட போது ஐநாவுக்கு அவ்வாறான மனு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று இந்த இரண்டு வாரங்களில் இரண்டாவது தடவையாக அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு தான் பிரச்சினை இருக்கிறது. ஜனவரி 31இல் இன்னர் சிற்றி பிரஸ}க்கு இந்தப் பதில் கிடைத்ததற்குப் பிறகு இலங்கையிலுள்ள ஐநா அலுவலகம் இந்த மனு தங்களுக்கு கிடைத்திருப்பதை வெளிப்படையாகவே உறுதிப்படுத்தியது. அவ்வாறானால் அது இன்னமும் ஏன் நியூயோர்க்கைச் சென்றடையாமல் இருக்கிறது.
ஜனவரி 31இல் இன்னர் சிற்றி பிரஸ் நேர்ஸ்கியிடம் எழுப்பிய கேள்வி வருமாறு:
இன்னர் சிற்றி பிரஸ்: அண்மையில் வெளியீட்டு நிறுவனமொன்று தீவைத்து எரிக்கப்பட்டது. லங்கா ஈ நியூஸைச் சேர்ந்தவர்கள் உட்படப் பலரும் இது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரான ஒரு செயல் என்று குறிப்பிட்டார்கள்.
தவிரவும், ஒரு வருடத்திற்கு மேலாக காணாமல் போயிருக்கும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொடவைக் கண்டு பிடிப்பது சம்பந்தமாக ஐநாவின் உதவி கோரி ஐநாவின் கொழும்பு அலுவலகத்தில் - நான் நம்புகிறேன் நீல் பூனேவிடம் - ஒரு மனுவும் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கெதிராகத் தொடரும் நடவடிக்கைகள் குறி;த்து, ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது குறித்து ஐநா என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கிறது?
பேச்சாளர் நேர்ஸ்கி: நல்லது மேற்படி இரு கேள்விகளும் மின்னஞ்சலில் ஏற்கெனவே நீங்கள் அனுப்பி வைத்த கேள்விகள் தான் இவை குறித்து மேலதிகமாக எவுதும் தெரிந்தால் அவற்றை உங்களுக்கு நாங்கள் அறிவிப்போம். ஆனால் இது குறித்து என்னால் என்ன சொல்ல முடியுமென்றால், இதிலுள்ள முக்கியமான விடயம் என்னவென்றால் ஊடக சுதந்திரம் என்பது மிக முக்கியமான ஒன்று. எந்தவகையான அச்சுறுத்தலோ பயமோ தாக்குதல்களோ இன்றி ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.
இன்னர் சிற்றி பிரஸ்: ஐநாவின் கொழும்பு அலுவலகத்தில் பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியினால் மனு ஒன்று கையளிக்கப்பட்டிருக்கிறது. ஐநாவின் உதவி கோரும் அத்தகைய மனுக்களுக்கு என்ன நடக்கும்?
பேச்சாளர்:: நாங்கள் இது குறித்து விசாரித்தோம். அவ்வாறான ஒரு மனு கையளிக்கப்பட்டதாக நாங்கள் அறியவில்லை. நாங்கள் இது குறித்து மீண்டும் விசாரிப்போம். ஆனால் தற்போதைய நிலவரப்படி அவ்வாறான எந்தவொரு மனுவும் அங்கு சமர்;பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவரவில்லை.
அதன் பின்னர் நேர்ஸ்கியாலோ அல்லது ஐநாவின் வேறெந்த உறுப்பினராலோ எத்தகைய திருத்தங்களும் இன்னர் சிற்றி பிரஸ}க்கு அறிவிக்கவில்லை. எனினும் ஐநாவின் கொழும்பு அலுவலகம் கீழ்க்கண்டவாறு அறிவித்திருந்தது.
'ஐநா செயலாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட ஒரு கடிதத்தை கொழும்பு அலுவலகத்தின் வதிவிடப் பிரதிநிதி நீல் பூனே பெற்றிருக்கிறார். அது ஐநா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது' என்று டெய்லி மிரர் தெரிவித்திருந்தது. முன்னதாக நியூயோர்க்கிலுள்ள ஐ.நா அலுவலகம் ஜனவரி 24இல் சந்தியா எக்னெலியகொடவினால் மனு கையளிக்கப்பட்டமை தொடர்பில் தாம் எதையும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்திருந்தது என மார்ட்டின் நேர்ஸ்கி தெரிவித்திருந்தார்.
மறு நாள் பெப்ரவரி முதலாம் திகதி நேர்ஸ்கிக்குப் பதிலாகப் பணிபுரிபவரான பார்கான் ஹக் iநாவின் செய்தியாளர் மாநாட்டின் போது பின்வருமாறு தெரிவித்தார்.
நேற்றைய செய்தியாளர் மாநாட்டின் சில கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் உள்ளன. இலங்கை ஊடகவியலாளர் பிரச்சினை குறித்த கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. செயலாளர் நாயகத்தினால் அக்கடிதம் பெறப்பட்டுள்ளமையை நான் இப்போது உறுதிப்படுத்துகிறேன். அது கொழும்பு அலுவலகத்தின் வதிவிடப்பிரதிநதியால் நியூயோர்க்கிற்கு அனுப்பப்பட்டிருந்தது. அது இப்போது மனித உரிமைகளுக்கான அலுவலகத்தினரால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இரண்டு வாரங்கள் கழித்து ஹக் சொல்கிறார் கடிதம் கொழும்பிலிருந்து நியூயோர்க்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது என. ஆனால் பானின் பேச்சாளர் நேர்ஸ்கியோ கடிதம் இன்னமும் கிடைக்கவில்லை எனப் பதிலளிக்கிறார்.
பான் அல்லது ஐநா பிரகீத் தொடர்பான மனு குறித்து என்ன செய்தது என்று இன்னர் சிற்றி பிரஸ் கேட்டபோது நேர்ஸ்கி இவ்வாறு பதிலளித்தார்: செயலாளர் நாயகம் மட்டுமல்ல ஐநாவில் இருக்கிறார். நான் முன்னர் குறிப்பிட்டது போல அந்த மனு இன்னமும் எங்களுக்குக்கிடைக்கவில்லை. அவ்வாறான ஒன்றை இன்னமும் நாங்கள் பார்வையிடவில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
மீதி செய்தியாளர் மாநாட்டில் ஊடக சுதந்திரம் தொடர்பில் பான் கீ மூனின் செயலாற்றலின்மை குறித்த விமர்சனம் குறித்த கேள்விகளை நேர்ஸ்கி தவிர்த்து விடுகிறார்.
0 comments :
Post a Comment