Thursday, February 24, 2011

பார்வதிக்கு யாழ் மாநகரசபையில் அஞ்சலியா ? மேயர் மறுப்பு

பிரபாகரனின் தாய் திருவேங்கடம் பார்வதி காலமாகி அவரது பிணம் அனாதைப் பிணமாக பெற்ற பிள்ளைகள் , உற்றார் உறவினர் எவரும் அற்ற நிலையில் மஹிந்தவின் பிச்சையில் வாழ்கை ஓட்டும் சிவாஜிலிங்கத்தின் மேற்பார்வையில் தகனம் செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் பார்வதியின் பிணத்தைவைத்து பணம் , அரசியல் லாபம் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவோருக்கு யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணம் சிறந்த பாடம் புகட்டியுள்ளார். இன்று யாழ் மாநகர சபையின் பொதுக்கூட்டம் ஆரம்பமானபோது, எதிர்கட்சியை சார்ந்த த.வி.கூ உறுப்பினரான சங்கையா என்பவர் பார்வதிக்கு அஞ்சலி செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது, பார்வதியின் மரணத்திற்கும் யாழ் மாநகரசபைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என மறுதலித்துள்ளார்.

யாழ் மாநகரசபை பாரம்பரியத்தில் தனிநபர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட வரலாறுகள் கிடையாது, அந்த வகையில் தமிழ் மக்களின் அழிவிற்காக ஈனப்பிறவியொன்றை ஈன்று தள்ளிய பார்வதியின் மரணத்தை வைத்து கபட நாடகம் ஆடமுற்பட்டோருக்கு யாழ் மேயர் புகட்டிய பாடம் அவரது துணிவையும் நேர்மையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

1 comments :

டேவிற் ,  February 25, 2011 at 1:11 PM  

மிக நேர்மையும் துணிவுடனும் செயற்பட்ட மேயரின் செயற்பாட்டுக்கு நன்றி. மேயர் போன்று வீணாப்போன புலிவால்களை துக்கியெறிய அதிகாரத்திலுள்ள அனைவரும் துணியவேண்டும். இந்ந பார்வதியால் இந்நாடு பட்ட துயரம் யாவரும் அறிந்ததே.

பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தாக பரதேசிக்கூட்டம் பார்வதிக்கு அஞ்சலி செலுத்துகின்றது.

பிரபாகரன் கடத்திச் சென்று சிறைவைத்திருந்த மதிவதினிக்கு நடந்தவற்றை நினைத்துபார்க்காத கூட்டத்திற்கு பார்வதியில் வந்த கவலை என்ன.

இந்தியாவில் பாதுகாப்பாக வாழ்ந்த பார்வதி வன்னியில் மகனின் ஆட்சியில் அரச வாழ்வு வாழ்வதற்கு வந்து வன்னி அடைபட்டவுடன் வள்ளத்தில் இந்தியாவிற்கு ஓடுவதற்கு பயந்து மாட்டுப்பட்டார் என்பது உண்மை. இலங்கை அரசிடம் சரணடைந்த பிரபாகரனே தாயை காட்டிக்கொடுத்ததாக தகவல்கள் இவ்வாறு எத்எத்தனை தகவல்கள் உள்ளது. இத்துடன் முடிக்கிறேன்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com