சுவிஸில் ஈபிடிபி யுடனும் ஜேர்மனில் புலிகளுடனும் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள்.
இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் இன்று சூரிச் மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. ஜேர்மனுக்கான இலங்கை தூதுவர் மடுவகெதர தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மும்மத தலைவர்களுடன், ஈபிடிபி அமைப்பின் சிலரும் கலந்து கொண்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
நிகழ்வில் புலிகளின் இளையோர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.
சுவிஸில் ஈபிடிபி உறுப்பினர்களை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணைத்துக்கொண்ட தூதரகத்தினர் ஜேர்மனியில் புலிகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை கொண்டாடியுள்ளனர். கடந்தவாரம் பிராங்போர்ட் நகரில் இன்ரகொண்டினல் ஹோட்டலில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. இக்கொண்டாட்டங்களுக்கு புலிகள் தவிர்ந்த தமிழ் தரப்பினர் எவருக்கும் இலங்கை தூதரகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என கடந்த பல ஆண்டுகளாக ஜேர்மனியில் இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை தூதரகத்துடன் இணைந்து கொண்டாடிவந்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜேர்மன் ஹெசன் மாநிலத்தில் புலிகளுகளின் முன்னாள் பொறுப்பாளராக இருந்த ஆதவா றேடர்ஸ் உரிமையாளர் தலைமையிலான புலிகள் இம்முறை இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment