கணவரைக் காதலியுங்கள்... அதுதான் நிரந்தர சந்தோஷம்! - திருமதி ஒபாமா
சந்தோஷம் நிரந்தரமாக இருக்க ஒவ்வொரு பெண்ணும் தமது கணவரைக் காதலிக்க வேண்டும். அன்பு, மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொள்வதில் முன்னுரிமை தரவேண்டும். அப்போதுதான் சந்தோஷம் நிரந்தரமாக இருக்கும், என்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா.
உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் பெப்ரவரி 14ம் நாளின் முக்கியத்துவம் குறித்தும், காதலர் தினத்துக்காக அவர் சொல்ல விரும்பும் கருத்து குறித்தும் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதில் மிகச் சிறப்பாக, பெண்களுக்கு பாடம் சொல்லும் அளவுக்கு அமைந்திருந்துள்ளது.
திருமதி ஒபாமா கூறியிருப்பதாவது.
தங்களின் வாழ்க்கை சிறப்பாகவும், சந்தோஷமாகவும் அமைய தம்பதிகள் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ வேண்டும். பெண்கள் தங்கள் கணவர்களைக் காதலிக்க வேண்டும். அன்பையும் சந்ததோஷத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கணவன்- மனைவி இருவரும் தங்களின் அன்பையும், மகிழ்ச்சியையும் சிரிப்புடன் பகிர்ந்து கொள்வது முக்கியம். சிரிப்பில்லா இடத்தில் மகிழ்ச்சி இருக்காது.
எங்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. திருமணத்தின் போது அரசியலில் புகழ்பெற வேண்டும் என லட்சியத்துடன் அவர் (ஒபாமா) இருந்தார். முதலில் இல்லியாயிஸ் செனட் உறுப்பினரானார். பின்னர் அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் உறுப்பினர் ஆனார். தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்த பதவியில் உள்ளார்.
இந்த அளவு அவர் உயர்ந்த நிலை அடைவதற்கு எங்களின் மகிழ்ச்சி நிறைந்த சிரிப்பும் புரிந்து கொள்ளலும், எப்போதும் குறையாத காதலும்தான் காரணம் என நினைக்கிறேன். எங்களுக்கு இடையே எப்போதும் கோபப்படுவதற்கான சூழ் நிலை இருந்ததில்லை. மாறாக சிரிப்புடன் கூடிய மகிழ்ச்சியான தருணமே இருந்து வருகிறது.
அதுதான் எங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கியுள்ளது. எனவே, நாங்கள் எப்போதும் கேலி, கிண்டலுடன் கூடிய மகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தி கொள்கிறோம்...' என்றுள்ளார்.
0 comments :
Post a Comment