சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை அநீதியானது - முன்னாள் நீதியரசர்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனை அநீதியானது என முன்னாள் நீதியரசர் சரத் நந்த சில்வா தெரிவித்துள்ளார். மன்னராட்சிக் காலத்தில் போரை வெற்றி கொண்ட தளபதிக்கு பாரிய பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தற்போது போரை வென்ற தளபதி சிறையில் அடைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் சேவையை பாராட்டும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டமை சர்வதேச மனித உரிமைச் சட்டங்களை மீறும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்காக வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தை அவரது பாரியார் அனோமா பொன்சேகா பெற்றுக் கொண்டார். ஓய்வு பெற்ற படைவீரர்கள், ஊனமுற்ற படைவீரர்கள் , பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
0 comments :
Post a Comment