தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் முஸ்லிம் காங்கிரஸில் இணைவு
அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தருமான யூ.எல். சுபைதீன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று இணைந்துகொண்டார்.
பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இவர் கட்சியின் அங்கத்தவராக இணைந்துகொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று மாநகர சபைக்கான முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரொருவர் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸிற்கு மாறிய நிலையிலேயே, தற்போது அதாவுல்லாவின் கட்சியைச் சேர்ந்த இவர் முஸ்லிம் காங்கிரஸிற்கு மாறியுள்ளார்.
0 comments :
Post a Comment