இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை: அனைத்துலக மன்னிப்புச் சபை
இலங்கையில் மனித உரிமைகள் மேம்படவில்லை என்று ஐ.நா.வுக்கு அளிக்க உள்ள அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறிவருவதுடன், அங்கு கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றவை தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மேம்படவில்லை என்றும், ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அனைத்துலக மன்னிப்புச் சபை கையளிக்கவுள்ள எழுத்துமூலமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 16 ஆவது கூட்டத்தொடர் வரும் 28 ஆம் தேதி முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில்,அனைத்துலக மன்னிப்புச் சபை இந்த அறிக்கையை அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comments :
In your honest opinion? Sure we know about zappos...but who else?
Post a Comment