கச்சதீவு: புதிய உடன்பாடு வேண்டும் என்கிறது திமுக.
இலங்கைக்கு இந்தியா முன்பு கொடுத்த கச்சத்தீவு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய உடன்பாடு தேவை என்று தமிழ் நாட்டின் ஆளும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களைக் கொல்வதாகப் புகார்களும் போராட்டங்களும் கிளம்பி இருக்கும் வேளையில் இந்தக் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
பாக் நீரிணையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்வ தாக அடிக்கடி கிளம்பும் புகார் களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கச்சதீவைத் திரும்பப் பெறுவதே வழி என்று மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக ஏற் கனவே பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளது.
கச்சத்தீவின் மீது தமிழகத் திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டும் வகையில் இலங்கையுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என்று திமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுகிறார்கள். படுகொலை செய்யப்படுகிறார்கள். மீன்பிடி வலைகள் சிதைக்கப்படு கின்றன. தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் கொள்ளை யடிக்கப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் பகுதி புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் இலங்கை கடற்படையினரால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள திமுக பொதுக்குழு, இந்த கொடுஞ் செயலுக்கு இலங்கை கடற்படை யினர் காரணம் அல்ல என்று வாதிடும் இலங்கை அரசுக்கு திமுக வன்மையான கண்டனத்தை தெரிவித்தது.
தமிழக மீனவர்களின் நலனை யும், பாதுகாப்பையும் நிரந்தரமாக தொடரச் செய்யும் வகையில், கச்சதீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை நிலைநாட்டும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்று இலங்கையுடன் போடப்பட வேண்டும் என பொதுக்குழு இந்திய அரசை வலியுறுத்தியது.
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதே நிரந்தர சக வாழ்வுக்கு வழிவகுத் திடும் என்பதால், அரசியல் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கட்சி வலியுறுத்தி இருக்கிறது.
தமிழக மீனவர்கள் இனியும் கொல்லப்பட்டால் அதற்கு இலங்கை பொறுப்பு என்றால் இந்தியா இலங்கை இரு நாடு களின் உறவு கெடும் என்று சில நாட்களுக்கு முன் இந்தியா வின் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா கொழும்பை கடுமையாக எச்சரித்தார்.
இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மீனவர் வீட்டுக்கு அண்மையில் சென்ற அதிமுக தலைவி ஜெயலலிதா, இப்படி மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கச்சத் தீவை இலங்கையிடம் இருந்து திரும்பப் பெறுவது ஒன்றுதான் வழி என்று கருத்து தெரிவித்தார்.
இதேநேரம் பாக் நீரிணையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதன் தொடர்பில் முதல் முதலாக இந்தியா இலங்கையைக் கடுமையாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதுடெல்லியில் தமிழக முதல்வர் கருணாநிதியும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணாவும் திங்கட்கிழமை சந்தித்தனர். இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து இந்தியாவின் எச்ச ரிக்கை வெளியாகி இருக்கிறது.
“எவ்வித சூழலிலும் இலங்கை தனது படை பலத்தை மீனவர்கள் மீது உபயோகிக்கக் கூடாது. அதை இன¬மேல் ஏற்றுக் கொள்ள முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது கடந்த காலமாக இனி இருக்க வேண்டும்.
“இதை மீறி இலங்கை கடற் படையினர் தாக்குதலைத் தொடர்ந் தால், இரு நாடுகளின் நல்லுறவை அது பாதிக்கும்,’’ என்று திரு கிருஷ்ணா எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாரம்பரியமாக நிலவும் தோழமைத்துவமும் நட்பும் கெடாமல் பார்த்துக்கொள்வது இலங்கை அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் இதுவரை இப்படி ஓர் எச்சரிக்கையை இந்திய அரசு வெளியிட்டதே இல்லை என்று தெரிகிறது. இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது.
என்றாலும் அப்போதைக்கு அப்போது இலங்கை இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளது.
அண்மையில் தொடர்ச்சியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் பாக் நீரிணையில் கொல்லப்பட்டனர். இலங்கையின் ராணுவம்தான் தமிழக மீனவர் களைப் படுகொலை செய்வதாக இந்தியாவில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் பெரும் போராட்டம் இடம்பெற்றது. எல்லா அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்சினை யைக் கையில் எடுத்தன.
தமிழ்நாடு அரசு தங்களுக்கு உதவாத பட்சத்தில் தாங்கள் இலங்கையிடமே தஞ்சம் புகுந்து விடப்போவதாகக் கூடத் தமிழக மீனவர்கள் மிரட்டினார்கள். இதனை அடுத்து இந்தியாவின் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தீவிரமாகத் தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் ஒரு நாள் பயணமாக கொழும்பு சென்று இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேச்சு நடத்தினார்.
அச்சந்திப்பை அடுத்து இரு நாடுகளும் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
தமிழக மீனவர்கள் தாக்கப் படக்கூடாது என்று அந்த கூட்டு அறிக்கை வலியுறுத்தியது. அதை அடுத்து இந்தியாவின் இப்போதைய கடுமையான எச்சரிக்கை வெளியானதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment