ஜெர்மனியில் புலி செயற்பாட்டாளர் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபணம்.
புலிகளின் செயற்பாட்டாளர் என கூறப்பட்டு ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட ஒருவரின் குற்றங்களை ஜேர்மனிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.அகிலன் என்ற ஜேர்மனிய குடியுரிமையைக் கொண்ட அவர், கடந்த வருடம் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.
2004 முதல் 2009ம் ஆண்டு வரையில், ஜேர்மனியில் இயங்கும் புலிகளின் ஆதரவு அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பேச்சாளராக அவர் செயற்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர் புலிகளுக்கு சுமார் 5 லட்சம் டொலர்கள் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment