ஜெனரல் பொன்சேகா சார்பாக ஜே.வி.பி உண்ணாவிரதப் போராட்டம்.
சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகாவின் விடுதலை வேண்டி ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் வெலிக்கடை சிறைச்சாலை முன்பாக பாரிய உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை நாடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று ஜேவிபி யினர் ஒழுங்கு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டில், சகல அரசியல் பேதங்களையும் ஒர் பக்கத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்பணித்து போராடிய தலைவனின் விடுதலைக்கான போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுதல் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment