அம்பாறையில் சட்டவிரோத தொலைக்காட்சி சேவை சுற்றிவளைப்பு.
பொலிஸார் நடத்திய திடீர் சோதனை மூலம் அக்கரைபற்று மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் இயங்கி வந்த இரு சட்டவிரோத தொலைக்காட்சி சேவைகள் கண்டுபிடுக்கப்பட்டு இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தொலைக் காட்சி சேவைகளில் நாளாந்தம் 16 நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியுள்ளதுடன், இநத் தொலைகாட்சி சேவையினை சுமார் 120 பேர் பணம் செலுத்தி பார்க்கின்றனர்.
இத் தொலைக்காட்சி சேவைக்கென ஆரம்கட்டணமாக ரூபா மூவாயிரமும் மாதாந்தம் 350 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்விரண்டு பிரதேசங்களிலும் ஒத்த சேவையே வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment