மதுபோதையில் பழவியாபாரியின் மூக்கை உடைத்த பொலிஸார்.
சிலாபம் பிரதேசத்தில் பழக்கடை ஒன்றினை நடாத்திவந்த 28 வயதுடைய கபில சம்பத் எனும் இளைஞனின் மூக்கினை மதுபோதையில் சென்ற பொலிஸார் இருவர் அடித்து உடைத்துள்ளனர். இவர் தாக்கப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் இல்லாதபோதும், தாக்குதலுக்கு உள்ளான நபர் நட்டநடவடிக்கை எடுப்பதை தடுக்கும்பொடுட்டு அவர்மீது புனை வழக்கு ஒன்றினை தொடர பொலிஸார் முயற்சித்துள்ளதாக ஆசிய மனித உரிமைகள் சங்கம் குற்றஞ்சுமத்துகின்றது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞனை சிலாபம் வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்ற பொலிஸார் அவருக்கு வைத்திய உதவி செய்துள்ளபோதிலும், தாக்குதல் தொடர்பான மருத்துவ அறிக்கையில் மாற்ற ங்களை செய்ய முனைவாதாகவும் தெரியவருகின்றது.
அதேநேரம் இச்சம்பவம் தொடர்பாக சுயாதீனமான விசாரணை ஒன்றினை மேற்கொள்ளுமாறு ஆசிய மனித உரிமைகள் சங்கம் பொலிஸ் மா அதிபருக்கு அவசர கடதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது.
1 comments :
இப்படியான கேவலமான பொலிசாரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளே இன்று துனீசியா, எகிப்து போன்ற நாடுகளில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை மகிந்தா அரசாங்கமும் எச்சரிக்கையாக ஏற்று நடந்துகொள்ள முன்வரவேண்டும். இல்லையேல் அதற்கான விளைவுகளை இலங்கையிலும் எதிர்நோக்க வேண்டிவரும் என்பதே உண்மை.
Post a Comment