பரமசிவன் கழுத்தில் இருக்கும் வை.கோ!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலர் வை.கோபாலசாமி அண்மையில் டில்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்து அரை மணி நேரம் பேசினார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து பேசுவதற்காகவே, பிரதமர் சிங்கை சந்திக்க நேரம் கேட்ட வை.கோ, தனது சந்திப்பின் போது, வேறு விடயங்கள் பேசுவதிலேயே நேரத்தைச் செலவிட்டார்.
இந்திய மீனவர் விடயத்தில் இலங்கை கடற்படையை விட பாகிஸ்தான் கடற்படை தாராள
மனதுடன் நடந்து கொள்வதாகப் புகழ்நதார். இலங்கையில் சீனா வெகு ஆழமாக ஊடுருவி
வருவதாக சிங்குக்கு 'கோள்' மூட்டினார். கேரளாவில் ஆட்சியிலிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசு மீது, முல்லைப் பெரியாறு நதி நீர் சம்பந்தமாக கடூரமான வசை பாடினார்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவைப் புகழ்நத வை.கோ, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்
அவரே வெற்றி பெறுவார் என்பதை தான் முன்னரே கணித்துச் சொன்னதாகப் பெருமையும்
அடித்துக் கொண்டார்.
வை.கோ அவர்களே! சபாஸ், நிற்க வேண்டிய இடத்தில் நிற்கிறீர்கள். வேஸ்டியை இறுக்கிக்
கொண்டு இன்னும் உறுதியாக நில்லுங்கள்!!
- வீரபாண்டி
1 comments :
பாம்பில்லை அது மிகவும் மோசமான பிசாசு.
Post a Comment