பெண் பாராளுமன்ற உறுப்பினர் முகத்தில் காயங்களுடன் வைத்தியசாலையில்!
கம்பஹகா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான உபேக்ஷா சுவர்ணைமாலி வீட்டில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் முகத்தில் காயமேற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல சிங்கள நடிகையான இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் அரசு பக்கம் கட்சி தாவியமை யாவரும் அறிந்தது. இவர் அரசின் பக்கம் தாவியதற்கு இவரின் க ணவரின் அழுத்தமே காரணம் எனவும் இதற்காக கணவர் அரசிடமிருந்து பெரும்தொகை பணத்தினை பெற்றிருந்தாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே நேரம் உபேச்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகம் ஒன்று உபேக்சா ஸ்வர்ணமாலியின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது தொலைபேசிக்கு பதிலளித்த அவரது கணவர், உபேக்சா ஸ்வர்ணமாலி கங்காரம பகுதியில் படப்பிடிப்பொன்றில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
எனினும், அதே ஊடகம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் வினவிய போது உபேக்சா ஸ்வர்ணமாலிக்கு சிறு காயம் காணப்படுவதாகவும் காயம் ஏற்பட்ட விதம் குறித்து தமக்கு ஏதும் தெரியாது எனவும், அவர் தற்போது வைத்தியசாலை 18 ஆம் இலக்க வாட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்:
0 comments :
Post a Comment