ஆசிரியர் உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள். -காரைதீவு நிருபர்.
தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை
ஆசிரியர் உதவியாளர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாகச் சங்கத்தின் பொதுச் செயலாளரால் கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரூபா 3000/= மட்டும் மாதாந்தக் கொடுபபனவாக ஆசிரியர் உதவியாளருக்கு வழங்கப்படுகின்றது. இக்கொடுப்பனவுடன் குடும்ப வாழ்ககையை யாரும் நடாத்த முடியாது. இக் கொடுபப்பனவுடன் ஆசிரியர்களின் வேவையை சரிவரசந் செய்யவும் முடியாது ஆசிரியர்களின் அந்தஸ்தை அவர்கள் பேணிப் பாதுகாக்கவும் முடியாது.
சிற்றூழியர்களைக் காட்டிலும் குறைந்த மாதாந்தக் கொடுப்பனவை மாத்திரம் வழங்குவது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது இயற்கை நீதிக்கு முற்றிலும் முரனானது. இவர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படிகளும் வழங்கப்படுவதில்லை. கஸ்ட மற்றும் மிகக் கஸ்டப் பாடசாலைகளில் சேவையாற்றப் பணிக்கப்பட்ட போதும், ஏனைய ஆசிரியர்கள் போல கஸ்ட, மிகக் கஸ்ட பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கான விசேட படிகளும் வழங்கப்படுவதில்லை. இவ்வகையான ஆசிரியர்களுக்கு ஏன் இந்தப் பாகுபாடு? ஏன் இந்த மாற்றாந் தாய் மனப்பான்மை? கல்வி அமைச்சுக் காட்ட வேண்டும் எனவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் கேள்வியெழுப்பியுள்ளார். இவ்வகையான ஆசிரியர் நியமனங்கள் மூலம் நிர்ந்தர ஆசிரியர்களின் அந்தஸ்து மோசமாகப் பாதிக்கப்படுகின்றது. இவ்வாசிரியர்நியமனங்கள் மூலம் கல்வி அமைச்சு ஆசிரியர் சமூகத்தைச் சுரண்டுகின்றது.
இவர்களில் நூற்றுக்கணக்கானோர் பட்டதாரிப் பட்டம் பெற்று வருடங்கள் கழிந்துள்ள போதும், இப்போதும் அவர்களுக்கு ரூபா 3000/= மட்டும் மாதாந்தக் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. அவர்களின் நியமனக் கடிதங்களில் பட்டப் படிப்பை முடித்ததும் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சு இன்றுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
இவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில்,
1. பட்டதாரி பட்டம் பெற்றவர்களை பட்டம் பெற்ற திகதியிலிருந்து இலங்கை ஆசிரியர் வேவை வகுப்பு III தரம் 1ல் நியமிப்பதற்கும்,
2. ஏனையவர்களை இலங்கை ஆசிரியர் வேவை வகுப்பு III தரம் 2ல் முதல் நியமனத் திகதியிலிருந்தும் நியமிப்பதற்கும், பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சங்கம் வலியுறுத்துவதாக கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
பட்டதாரிகள் எப்பதவிப் பெயர்களில் ஆசிரியர் சேவை செய்திருந்தாலும் அக்காலத்தை ஆசிரியர் சேவைக்காலமாகக் கருத வேண்டும். தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை
திட்டமிடல் உதவியாளர்கள், செயற்திட்ட உதவியாளர்கள், அபிவிருத்தி உதவியாளர்கள் பட்டதாரிப் பயிலுநர்கள் போன்ற பெயர்களுடன் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெற்று ஆசிரியர்களாகப் பணிபுரிந்த சேவைக் காலத்தை ஆசிரியர் சேவைக்காலமாகக் கணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாகச் சங்கத்தின் பொதுச் செயலாளரால் கல்வி அமைச்சருக்கு அனுப்பப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்கம் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு காலத்திற்குக்காலம் பட்டதாரிகளை வெவ்வேறு பெயர்களை வழங்கி பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்தது. பட்டதாரிகள் திட்டமிடல் உதவியாளர்கள், செயற்திட்ட உதவியாளர்கள், அபிவிருத்தி உதவியாளர்கள், பட்டதாதரிப் பயிலுநர்கள் போன்ற பெயர்களுடன் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் பெற்று ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர் காலக்கிரமத்தில் இப்பட்டதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டனர்.
இவ்வாறு இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட போது அவர்களின் பணிலுநர் சேவைலக்காலம் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவில்லை. இதன் விளைவாக அவர்கள் ஒரு புறத்தில் சேவை மூப்பை இழக்கின்றனர். மறுபுறத்தில் அதிபர், கல்வி நிர்வாக சேவை போன்ற பதவி உயர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியாதவர்களாகவும் உள்ளநர். இதனால் இவ்வகையான பட்டதாரிகளின் எதிர்காலம் இருள்மயமாக்கப்ட்டுள்ளது.
இவர்கள் பட்டத்தை முடித்த பின்னர் சில வருடங்களை அரசின் பிழையான சமூகப் பொருளாதாரக் கொள்கைகளினால் உரிய வேலை கிடைக்காது வீணாக்கினர். நியமனம் பெற்றபின்னரும், அதுவும் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தும் அச்சேவைக்காலத்தையும் இழக்கின்ற நிலை மிகக் கவலைக்குரிய விடயமும், கல்வி அமைச்சு இவர்களுக்குக் காட்டும் அநீதியும் ஆகும்.
இவர்களுக்கு நீதிகிடைக்கும் பொருட்டு, இவர்கள் ஆசிரியர்களாக எப்பதவிப் பெயர்களில் சேவை செய்திருந்தாலும் அக்காலத்தை ஆசிரியர் சேவைக்காலமாகக் கருத நடவடிக்கை எடுக்கவேண்டுமென சங்கம் வலியுறுத்துவதாக கல்வி அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு த. மகாசிவம் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment