லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை.
லிபியாவில் கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிபர் முவம்மர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்துள்ளது. லிபியா முழுவதும் தெருக்களில் இறங்கி போராடும் மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு இருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீதே ராணுவம் தாக்குதல் நடத்துகிறது. விமானம் மூலமாக குண்டு வீசப்படுகின்றன. ராணுவம் மற்றும் கடாபி ஆதரவாளர்கள் நடத்தும் தாக்குதலில் இதுவரை 300 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், `போராட்டக்காரர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள வன்முறையை லிபியா அரசு உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது.
1 comments :
what this council did when sri lankan govt did the worst than this.
Post a Comment