ஜனாதிபதியின் பேச்சில் மக்கள் பலத்த சந்தேகம். ஐ.தே.க
63ஆவது சுதந்திர தின நிகழ்வின் போது பேசிய ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக பிரபல்யமான தீர்மானங்களை எடுப்பதைவிட எதிர்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிடுமென தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இக்கூற்றானது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது மக்கள் மத்தியில் பிரபல்யமான, கடினமான தீர்மானங்களை எடுத்து இராணுவத்தினர் யுத்தத்தை வெற்றிகொண்டனர். ஆனால் இன்று அரசாங்கம் கூறும் பிரபல்யமான தீர்மானம் என்ன? கடினமானத் தீர்மானம் என்ன என்பது குறித்து மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்த்த பிரபல்யமான தீர்மானம்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பாகும். அரசாங்கத்திற்கு பிரபல்யமான தீர்மானம் எடுக்க முடியாமல் போனமை, எதிர்கால சந்ததியினருக்காக கடினமான தீர்மானம் எடுக்க நேரிட்டமைக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம். என்றார் கயந்த.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவற்றை தெரிவித்த அவர் மக்களை ஏமாற்றும் இந்த அரசாங்கம் பல தடவைகள் கடினமானம் தீர்மானங்களை எடுத்துள்ளதெனவும் குற்றஞ்சாட்டினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்
யுத்தத்தின் பின் வடக்கில் மூன்றில் இரு பகுதி கடற்பரப்பு விடுவிக்கப்பட்டதன் பின்னர் குறைந்த விலையில் மீன் சாப்பிட முடியுமென அரசாங்கம் கூறியது. அன்று சாலையோ மற்றும் நெத்தலி மீன் சாப்பிட்ட விலைக்கு யுத்தத்தின் பின்னர் அறுக்குளா மீன் சாப்பிட முடியுமெனக் குறிப்பிட்டனர்.
எனினும் யுத்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அன்று அறுக்குளா மீன் சாப்பிட்ட விலைக்கு இன்று மக்கள் சாலையோ மற்றும் நெத்தலி மீன் சாப்பிடுகின்றனர்.
0 comments :
Post a Comment