பெண் பா.உ முகத்தை அடித்துடைத்த கணவனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு.
கம்பஹகா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான உபேக்ஷா சுவர்ணைமாலியின் முகத்தினை அடித்து உடைத்த அவரது கணவரைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். வீட்டில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தால் முகத்தில் காயமேற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தபோதும், தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினரான இவர் தனது மெற்பாதுகாவலர்கள் சகிதம் காரில் சென்று கொண்டிருந்தபோதே இவரது காணவர் முகத்தில் குத்தி காயம் ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
மெய்பாதுகாவலர்களில் ஒருவர் வண்டியைச் செலுத்திச் செல்ல மற்றவர் முன் ஆசனத்தில் அமர்ந்து சென்றுள்ளார். பின்ஆசனத்தில் அமர்ந்திருந்து பாராளுன்ற உறுப்பினருக்கும் அவரது கணவருக்கும் எற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அவரது கணவர் காரினுள் வைத்தே தாறுமாறாக தாக்கியதாகவும், வண்டியை நிறுத்திய மெய்பாதுகாவலர்கள் நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து முகத்தில் காயம் ஏற்பட்டிருந்த பாராளுன்ற உறுப்பினரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாராளுன்ற உறுப்பினர் மிரிஹான பொலிஸில் கணவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதுடன், பொலிஸார் கணவரைத்தேடி வலை விரித்துள்ளனர் என பிரதம பொலிஸ் அதிகாரி செனரத் எக்கொடவல தெரிவித்துள்ளார்.
பா.உ வின் கணவர் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு பிரபல அமைச்சர் ஒருவர் பொலிஸ் மா அதிபருக்கு அழுத்தம் கொடுத்துவருவதாக தெரியவருகின்றது. அத்துடன் சம்பவம் மெய்பாதுகாவலர்களாலேயே ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதுடன். கணவரின் அரசியல் செல்வாக்கு காரணமாக அவர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக nரியவருகின்றது. அதேநேரம் மெய்பாதுகாவலர்கள் எம்பி மீது தாக்குதல் நடாத்தப்படுவதை தடுக்காமைக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல சிங்கள நடிகையான இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் அரசு பக்கம் கட்சி தாவியமை யாவரும் அறிந்தது. இவர் அரசின் பக்கம் தாவியதற்கு இவரின் க ணவரின் அழுத்தமே காரணம் எனவும் இதற்காக கணவர் அரசிடமிருந்து பெரும்தொகை பணத்தினை பெற்றிருந்தாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment