யாழில் மீண்டும் பதிவு.
யாழ்ப்பாணத்தில் குடும்ப அங்கத்தினர்களை உறுதிசெய்யும் குடும்ப அட்டைகளை இராணுவத்தினர் பரிசோதித்துவருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றது. ஒவ்வொரு வீடு வீடாகச் செல்லும் இராணுவத்தினர் குடும்பப் பங்கீட்டு அட்டையைப் பார்த்து பதிவதுடன், குடும்பத்தினரின் விபரங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர். வெளிநாட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர் மற்றும் வாகனங்கள் உள்ளனவா என்பது தொடர்பான கேள்விகளை இராணுவத்தினர் மக்களிடம் கேட்டு பதிவுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்த காலப் பகுதியில் மக்கள் பதிவுகளை இராணுவத்தினர் மேற்கொண்டிருந்தனர்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றமையினால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பகரமான நிலை உருவாகியுள்ளதாக எமது யாழ். செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
0 comments :
Post a Comment