போர் குற்றச்சாட்டுகள் பற்றி பேசாதீர். அரசு த.தே.கூ விற்கு அறிவுறுத்தல்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர்க்குமாறு அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, அரசாங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இவ்வாறான குற்றச்சாட்டுகள் காரணமாக அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் பிரச்சினையாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த கோரிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோபூர்மற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment