பூட்டானில் பீரிஸ்-எஸ்.எம்.கிருஷ்ணா சந்திப்பு, தமிழக மீனவர்கள் படுகொலை பற்றி பேச்சு.
பூட்டான் தலைநகர் திம்புவில் ஹசார்க்ஹ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்திய மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவும் இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரிசும் இன்று திம்பு செல்கின்றனர்.
பூட்டான் நாட்டில் இலங்கை வெளியுறவு மந்திரியை எஸ்.எம்.கிருஷ்ணா இன்று சந்தித்து தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை கடற்படை தவிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவதோடு, மீனவர் படுகொலை குறித்த இலங்கை அரசின் விசாரணை விவரங்களையும் அவர் கேட்டறிவார். தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வழிமுறைகள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என தெரியவருகிறது.
இந்த பேச்சுவார்த்தைக்காக மத்திய வெளியுறவு அமைச்சகத்தில் இலங்கைக்கான விவகாரங்களை கவனித்து வரும் இணை செயலாளர் டி.எஸ்.திருமூர்த்தியும் திம்பு சென்றுள்ளார்.
0 comments :
Post a Comment