இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக இந்தியா எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக வாக்களிக்கப்போவதாக இந்திய அரசாங்கம் அச்சுறுத்தியுள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்காத பட்சத்தில், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா அச்சுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்பு செயலாளருடன் இடம்பெற்ற அவசர சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மீனவர்களை விடுவிக்காமை மற்றும் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை இடைநிறுத்தல் போன்ற இந்தியாவின் கோரிக்கைகளை இலங்கை தொடர்ந்தும் புறக்கணிக்கும் பட்சத்தில், இந்தியாவுக்கு இதை தவிர வேறு வழி இல்லை என அசோக் கே காந்தா தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தலை விடுக்கும் பொருட்டே சாதாரணமாக இவ்வாறான விடயங்களில் வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திக்காமல் இந்திய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சராக இருந்த போதும் ஜீ.எல்.பீரிஸ் இந்த பிரச்சினைத் தொடர்பில் தீர்வு எடுக்கக் கூடிய எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை இந்திய அறிந்துக் கொண்டிருக்கின்றது என்பது இதில் இருந்து புலனாவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment