முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் கொலை சந்தேகநபருக்கு குற்றப்பத்திகை.
முக்கிய நபர்களை கொலை செய்ய திட்டமிட்ட புலிகள் இயகத்தின் உறுப்பினர் குறித்து தகவல் அறிந்தும் அதனை பாதுகாப்புப் பிரிவினருக்கு அறிவிக்காமல் இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீவிரவாத ஒழிப்பு சட்டத்திற்கு அமைய சட்டமா அதிபரினால் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோபுள்ளேவை கொலை செய்ய உதவி, ஒத்துழைப்பு வழங்கிய ரமேஷ் எனப்படும் புலிகளின் உறுப்பினர் குறித்த தகவல்களை மறைத்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி லக்ஷ்மன் குரே சந்தேகநபகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து வழக்கு விசாரணை ஜூலை 2ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை அதுவரை பொலிஸ் கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment