புலிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமா?
தமிழ்நாடு மாநிலத்தில் இடம்பெற இருக்கும் எதிர்வரும் சட்ட மன்ற தேர்தலின்போது மிக முக்கிய அரசியல் பிரமுகர்களை படுகொலை செய்கின்றமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் திட்டம் இட்டு உள்ளனர் என்று அந்நாட்டின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் தமிழ் நாடு பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள் என "த இந்து" செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அச் செய்தியிலே:-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் இத்தாக்குதல்களை நடத்துகின்றமைக்காக தமிழ் நாடு வந்து உள்ளார்கள் என்றும் இரகசிய இடங்களில் பயிற்சிகளை பெற்று வருகின்றார்கள் என்றும் இந்திய உள்துறை அமைச்சு புலனாய்வுப் பிரிவினரை விழிப்படைய செய்துள்ளது.
இத்தாக்குதல்களை மேற்கொள்கின்றமைக்காக வந்திருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் வெடிபொருட்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் இத்தாக்குதல்கள் தொடர்பான முக்கிய விடயங்களை வெளிப்படுத்தி உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது..
சென்னையில் வளசரவாக்கம் பகுதிக்கு புலிகள் இயக்க உறுப்பினர்கள் வந்து தங்கி உள்ளனர் என்றும் புலிகள் இயக்கத்தின் நிதிப் பிரிவு மற்றும் விமானப் படைப் பிரிவு ஆகியவற்றை சேர்ந்த முக்கியஸ்தர்கள் தமிழ்நாட்டில் ஊடுருவி நிற்கின்றனர் என்றும் இலங்கை இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புலிகள் மூலம் தகவல்கள் கசிந்து உள்ளன.
இதேவேளை அகதிகள் என்கிற போர்வையில் புலிகள் இயக்க தற்கொலைக் குண்டுதாரிகள் நாகர் கோவில் பகுதியை கள்ளத் தோணிகள் மூலம் வந்து அடைந்துள்ளார்கள் என்று கள்ளத் தோணிகளில் ஆட்களை ஏற்றிக் கொண்டு வருபவர்கள் மூலம் தமிழ் நாடு கடல் படையினருக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன.
கோயம்பூத்தூரில் உலக செம்மொழி மாநாடு இடம்பெற்றபோதும், பிரதமர் மன்மோகன் சிங் சென்னைக்கு வருகை தந்து இருந்தபோதும் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம் தீட்டி இருந்தார்கள் என்று மத்திய புலனாய்வுப் பிரிவினரால் முன்னெச்சரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன என்றும் புலிகளின் அத்தாக்குதல் முயற்சிகள் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக முறியடிக்கப்பட்டன என்றும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக இலங்கையர்களை அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அகதிகளாக அழைத்துச் செல்கின்ற கள்ளத் தோணிக்காரர்களை மடக்கிப் பிடித்து இருந்தனர் என்றும் இவர் குறிப்பிட்டார்.
மீண்டும் ஓரணி சேர புலிகள் இயக்கத்தினர் தமிழ் நாட்டை தளமாக கொண்டு முயற்சிக்கின்றனர் என்று கசிந்திருக்கும் தகவல்களை பொய்யானவை என்று நிராகரிக்க முடியாது என்றும் கூறிய இவர் தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுக்கு கடல் வழியாக ஆட்கடத்தல் செய்யும் நடவடிக்கைகளில் முக்கிய புலிப் பிரமுகர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றும் தகவல்கள் கிடைத்து உள்ளன என்றும் இவர் சொன்னார்.
2 comments :
தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் ஒரு பயங்கரவாத்தை ஏற்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டு நடைமுறைக்கு ஒத்திகை பார்க்கப்படுகிறது. இலங்கை முள்ளிவாய்க்கால் மாதிரி தமிழ்நாட்டிலும் ஒரு வாய்காலுக்கு வழிசமைத்து அதில் இலாபம் அடைய நினைப்பது சீமான் போன்ற தமிழ் துரோகிகளே.
தமிழ் நாட்டு தமிழர்களே தமிழ் துரோகிகளை கண்டு மிகவும் எச்சரிக்கையாக நடவுங்கள்.
தயவு செய்து போலிகளையும், பொய்களையும் நம்பி நடுத்தெருவில் நிற்க எத்தனிக்க வேண்டாம்.
Seaman wants to be a Tamil Naadu Tiger leader. He wants to see TN Tamils suffering from terrorism like Tamils in SriLanka.
It's like Cat and Mouse game.
Post a Comment