ஜேவிபி யின் தலைவராக சோமவன்ச அமரசிங்க மீண்டும் தெரிவு.
மக்கள் விடுதலை முன்னணியின் 6 வது தேசிய மகாநாடு மிகவும் ஆராவாரத்துடன் கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. இம்மாநாட்டின்போது புதிய தலைவர் தெரிவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டபோது, புதிய தலைவராக சோமவன்ச அமரசிங்க ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் கட்சியின் அரசியல் பீடத்திற்கான 23 பேரும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் இருவர் புதிய முகங்கள்.
இம்மாநாட்டில் பல நாட்டு இராஜ தந்திரிகளும், ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் துணைவியார் அனோமா பொன்சேகா உட்பட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment