தேர்தலைக் கண்டு அஞ்சுகிறது அரசாங்கம்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அரசாங்கம் தேர்தலை கண்டு அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் அஞ்சுவதாகவும் மக்கள் நினைப்பு என்ன என்பது இன்று யாருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்ட அவர் தயவு செய்து எதிர்வரும் தேர்தலை ஒன்றாக நடத்தி முடித்து மற்றைய நடவடிக்கைகளை தொடருங்கள் என்றார். இது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல். இந்த போட்டியை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு விளையாட்டை நடாத்த தயார் என்றால் அதன்படி விளையாட நாங்களும் தயார் என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment