விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் ஒப்புதல்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட "விக்கிலீக்ஸ்" நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை ஸ்வீடனுக்கு நாடுகடத்த பிரிட்டன் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 2 பெண்கள் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் நாடுகடத்தக்கூடிய அளவிலான குற்றச்சாட்டுகள்தான் என்றும், இது தொடர்பாக ஸ்வீடனின் பிடியாணை முறையாக பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஹெளவார்ட் ரிடில் கூறினார்.
எனினும் இந்த தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய அசாஞ்சே வழக்கறிஞர்களுக்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment