தமிழீழ விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படடமாட்டாது-ஜனாதிபதி.
ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை இன்று காலை அலரிமாளிகையில் சந்தித்த ஜனாதிபதி தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த காலத்தில் முன்வைத்த எந்தவொரு கோரிக்கையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறைவேற்றமுடியாது என தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும் இதன்போது பொருளாதார பிரச்சினை, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை மார்ச் மாதம் 1 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை ஒன்றிணைந்த செயற்குழுவினூடக இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் 2006 ஆம் ஆண்டின் பின்னர் ஒன்றிணைந்த செயற்குழு கூடவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இரட்டைக்குடியுரிமை தொடர்பில் தீர்மானம் எடுக்க உபகுழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் முன்மொழிவுக்கேற்ப பிரச்சினைகளுக்கு தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் நாட்டில் போராட்டம் நிலவிய காலத்தில் அதிகாரிகள் எவரேனும் தமது கடமைகளை உரிய முறையில் செய்ய தவறியமை குறித்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் அது குறித்து நிச்சயம் ஆராயப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment