Sunday, February 20, 2011

ஜெயலலிதாவுடன் நடிகர் விஜய் தந்தை சந்திப்பு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நேற்று மாலை 6.50 மணிக்கு சந்தித்து பேசினார். கடந்த சில மாதங்களில் மூன்றாவது முறையாக ஜெயலலிதாவை அவர் சந்தித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.

மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் போக்கை கண்டித்து விஜயின் மக்கள் இயக்கம், வரும் 22-ம் தேதி நாகை நடத்தவுள்ள பொதுக் கூட்டத்துக்கு முன்பாக நடந்துள்ள இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான சந்திப்பு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்ட போது அவர் கூறியது:

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது. இது குறித்து வேறெதும் சொல்வதற்கில்லை. நாகை பொதுக் கூட்டத்துக்கு தயாராகி வருகிறோம். 21-ம் தேதி நான் நாகை செல்கிறேன். 22-ம் தேதி காலை விஜய் நாகைக்கு வருகிறார். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.

வேலாயுதம் படத்தின் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சியில் இருந்த நடிகர் விஜய், இந்த சந்திப்பின் போது சென்னையில் இருந்தார். ஓய்வுக்காக அவர் சென்னை வந்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com