வடக்கு மக்கள் அரசாங்கத்தில் நம்பிக்கையிழந்துள்ளனர். டாக்டர் ஜெயலத்.
ஆழும் அரசாங்கத்தில் வடக்கு வாழ் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயல ஜெயவர்த்தன தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல்களில் யாழ் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை இன்று சந்தித்து பேசிவிட்டு திரும்புகையில் இலங்கைநெற் க்கு தமது யாழ் பயணம் தொடர்பாக தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு கூறிய அவர், எதிர்வரும் தேர்தலில் தமது கட்சி அதிகப்படியான ஆசனங்களை கைப்பற்றும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் தமது தேர்தல் பிரச்சாரங்கள் நம்பிக்கையற்றதாகவே காணப்படுவதாகவும், வடக்கில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்கள் தொகுதியினர் இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து உள்ளதாகவும், அவ்வதிகாரிகள் அரசின் கட்டளையின் கீழ் செயற்படும்போது, மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
காரைநகர்ப் பிரதேசத்தில் இடம்பெற்ற இன்றைய சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் , பொதுச் செயலாளர் , யாழ் மாவட்ட பா.உ மகேஸ்வரன் விஜயகலா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
அங்கு பேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய ,
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சிகைளை தற்போது இருக்கும் அரசாங்கம் இழுத்தடிப்பதாகவும், ஐக்கிய தேசிய கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அடங்கிய பொதியொன்றினை தயார் செய்து வருகிறது எனவும் அப்பொதி மக்கள் மத்தியில் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படும் தெரிவித்துள்ளார்:
இறந்த பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் யாழில் இளம் சமூகத்தினர் அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என விரும்பியிருந்தாகவும் அதற்கமைய இம்முறை தேர்தலில் போட்டியிட இளைஞர்களை தெரிவு செய்துள்ளோம் ஏனவும் கூறியுள்ளார்.
இம்முறைத் தேர்தலில் யாழ்.மாவட்ட பிரதேச சபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரைவிட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் அதிக ஆசனத்தை கைப்பற்றும் என பாராளுமன்ற உறுப்பினர் விஜியகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment