Sunday, February 13, 2011

பழ.நெடுமாறன், சீமான் போன்றோர் தீக்குளிக்க வேண்டியது தானே ? இளங்கோவன் கேள்வி

தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த முத்து குமாரை தியாகி என்று பாராட்டும் பழ.நெடுமாறன், சீமான் போன்றோர்கள் தாங்களும் தீக்குளித்து தியாகியாக வேண்டியது தானே என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இளங்கோவன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய போது இளங்கோவனை தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில் சேர்க்காததை கண்டித்து தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டித்த இளங்கோவன், தீக்குளிப்பது கோழைத்தனமானது, ஆண்மையற்ற செயல், அதனை காங்கிரஸ்காரர்கள் ஒரு போது செய்யக்கூடாது என எச்சரித்தார். மேலும் கூறுகையில், தீக்குளித்து இறந்த முத்து குமார் தியாகி எனில், வைகோ, நெடுமாறன், சீமான் போன்றாரும் அந்த தியாகத்தை செய்ய வேண்டியது தானே என கேள்வி எழுப்பினார்.

3 comments :

Anonymous ,  February 13, 2011 at 10:14 PM  

சீமான், வைகோ, நெடுமாறன் போன்றோர் உண்மையான தமிழ் பற்று, பாசம், அன்பு என்றால் முத்துகுமார் மாதிரி தீக்குளித்து தங்கள் உண்மையான உருவத்தை உலகத்தமிழருக்கு காட்ட முன்வரவேண்டும்.

அதற்கு உலகத் தமிழர்கள் எல்லோரினதும் ஆதரவு நூற்றுக்கு நூறு வீதம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால், அதற்கு சீமான், வைகோ, நெடுமாறன் அவர்கள் ஒருபோதும் முன்வரப்போவதில்லை.

இனியும் தமிழினத்தை அழித்து, சீரழித்து அதிலிருந்து இலாபம் காண எவராலும் எவராலும் முடியாது.

எனவே, இனியும் தமிழையும், தமிழ் மக்களையும் வைத்து தங்கள் சுயநலத்தை பார்க்க நினைப்பது வெறும் முட்டாள் தனம் என்பதை புரிந்துகொண்டு கோமாளி அரசியலில் இருந்து விலத்திக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது.

எனவே, உங்களை நீங்களே திருத்திக் கொள்வது மிகவும் வரவேற்கத்தக்கது.

Anonymous ,  February 15, 2011 at 6:38 PM  

Tamil Patrai Pulappaduttha tamilanukkaage poraadum tamil patraalanai thee kulikka sollum neenggalellaam oru tamizhana? Vekka Kedu.. Malaysiavil Tamizhukkaage Thinam Thinam Poraadi kondirukkum Enggalai pondra makkalukku thannambikkai ootttum manitharage thigazhum manithargalai theekkulikke sollum neenggalellam mathi ulla makkala, illai mathiketta maakkala??

Unknown April 22, 2011 at 3:40 PM  

தமிழக காங்கிரஸ்காரர்கள் எப்போது புத்திசாலித்தனமாக பேசியிருக்கிறார்கள், இப்போது சரியாக பேச!. இளங்கோ தற்கொலைக்கு தூண்டுகிறார் என்ற வகையில் அவர் மீது சட்ட நடவடிக்கை தாராளமாக எடுக்கலாம்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com