புலிகள் இயக்க உறுப்பினரின் கராஜில் வேலை செய்தேன். சன்.சீ.வி. கப்பல் அகதி தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் உறுப்பினர் ஒருவருடைய கரேஜில் தொழில் புரிந்தேனே தவிர தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக ஒருபோதும் செயற்பட்டதில்லை என எம்வீ எச் சீ கப்பலூடாகக் கனடாவை சென்றடைந்த இலங்கை அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சன் சீ கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களா என தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் 1996ஆம் ஆண்டு கரேஜில் வேலைக்குச் சேர்ந்த தான், அங்கு வேலை செய்த 6 மாத காலத்திற்குள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ, அவர்களது உறுப்பினராகவோ ஒருபோதும் செயற்பட்டதில்லை என சன் சீ கப்பல் அகதி ஒருவர் கனேடிய பாதுகாப்புப் பிரிவினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
சன் சீ கப்பலில் கனடாவைச் சென்றடைந்த 492 இலங்கை அகதிகளில் 6 பெண்கள் உட்பட 107 பேர் கனேடிய பாதுகாப்புப் பிரிவினரால் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது
1 comments :
புலிகளினால் தடுத்து வைத்து, முள்ளிவாய்க்கால் வரை பாதுகாப்பு அரணாக பாவிவிக்கப்பட்டு, பலிக்கலாக்கப்பட்ட தமிழர்கள் பலர், அப்படியிருக்க எப்படி அந்ததப்புலி உறுப்பினர்கள் தப்பி, அதுவும் கனடாவுக்கு வர முடியும்?.
Post a Comment