பூநகரி - மணியந்தோட்டப் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்.
வடக்கில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பூநகரி - மணியந்தோட்டப் படகுச்சேவை நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு ஒரு படகுசேவை மட்டும் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், தினமும் காலை 7 மணிக்கு மணியந்தோட்டத்திலிருந்து பூநகரி செல்லும் படகு பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் பூநகரியிலிருந்து மணியந்தோட்டத்திற்கு புறப்படும்.
விளாசி ஓடை மற்றும் மண்ணித்தலை ஆகிய பகுதிகளில் இருக்கும் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிபர்கள் போன்றோருக்கான போக்குவரத்துக்காக இச்சேவை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment