புலம்பெயர் புலிகள் கோத்தபாய சந்திப்பு.
இலங்கை அரசிடம் சரணாகதி அடைந்துள்ள புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் சகாக்களான புலம்பெயர் புலிகள் சிலர் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலிருந்து அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
இவர்கள் இவ் விஜயத்தின் போது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளனர். இச் சந்திப்பின் போது, தவறான பிரசாரங்களை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டாமென கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்கள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தீய சக்திகளை மௌனமாக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கு அபிவருத்திப் பணிகளில் பங்களிப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment