Wednesday, February 2, 2011

இலங்கை அரசிடமிருந்து அதிர்வு இணையத்திற்கு ஊக்குவிப்பு பணம்.

தமிழ் தேசியம் என பிதற்றும் தமிழ் இணையங்களில் ஒன்றான அதிர்வு கடந்த காலங்களில் இலங்கை அரசின் உற்ப த்திகள் உட்பட யாவற்றையும் தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும் என வலியுறுத்திவரும் அதேநேரத்தில் இலங்கை அரசின் பங்கு நிறுவனமான டயலொக் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு விளப்பரங்களை செய்யும் கொந்தராத்தில் கையொப்பமிட்டுள்ளமை தெரியவருகின்றது.

புலிகளியக்கத்திற்கான நிதி வழங்குதல் , கூட்டிணைந்தவரி , சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்பனவற்றுடன் தொடர்புடையவர் என சர்வதேச பொலிஸாரினால் தேடப்படும் நபர் ஒருவர் இலங்கை அரசின் ப ங்கு நிறுவினமான டயலொக் நிறுவினத்துடன் இணைந்து கொண்டு லண்டனில் டயலொக் சேவையை விஸ்திரப்படுத்தும் முயற்சிகளுக்கு அதிர்வு இணையம் விளப்பர ஒப்பந்தத்தினை செய்து கொண்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியம் என போலிப்பிரச்சாரம் செய்யும் இவ்விணையங்கள் பணத்திற்காக மேற்கொள்ளும் மோசடிகளுக்கான ஆதாரங்களில் ஒன்றாகவே இது கருதப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com