போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் மன்னன் கே.பி முதலமைச்சராகப் போகின்றாரா?
புலிப் பயங்கரவாதிகளுக்கான ஆயுதக்கொள்வனவாளராக செயற்பட்டு தற்போது ,லங்கை அரசிடம் தஞ்சம் புகுந்துள்ள கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் புதிய தழிழ் அரசியல் கட்சியோன்றை அமைப்பது தெடர்பாக இரகசியமான முறையில் பேச்சுவார்தை ஒன்றை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்தப் பாதுகாப்புடன் யாழ்.நகருக்குச் சென்ற கே.பி முக்கிய சமூகப் பிரதிநிதிகளையும், யாழ்.பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் சந்தித்து கட்சி அமைப்பது தெடர்பாக ஆராந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் காலத்தில் வட மாகாணத் தேர்தலில் வட மாகாணசபைக்குப் போட்டியிடுவதற்காக புதிய தழிழ் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கே.பியை யாழில் சந்தித்து பேசிய பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேபி யின் அரசியல் பிரவேசத்தினை ராஜபக்ச சகோதரர்கள் ஊக்குவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
கே.பி கைதாகி சில மாத ங்களின் பின்னர் கே.பி யை அரசு வடக்கின் முதலமைச்சராக்க முனைகின்றது என எதிர்கட்சிகள் தெரிவித்திருந்தபோது, அச்செய்தியினை அரச தரப்பினர் முற்றாக மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை அரசு கே.பி யை தாம் தடுப்புக்காவலிலே வைத்துள்ளதாக கூறும் அதேநேரம் கே.பி யும் தருணத்திற்கு ஏற்றாற்போல் தான் சிறைக்கைதி எனவும் கதைவிடுவதை அவதானிக்க முடிகின்றது.
தடுப்புக்காவல் கைதி ஒருவர் அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து மிரட்டுவதும், கட்டளையிடுவதும் உலகில் இலங்கையிலேயே இடம்பெற்றுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும
2 comments :
ஜனநாயகம் என்றால் எவருக்கும் சமமான உரிமைகள் உண்டு.
எனவே, எவரும் அரசியல் கட்சி அமைக்கலாம்,
அரசியலில் இறங்கலாம். இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் ஏன் தமிழ் மாகாண முதலமைச்சர்களாக வரக்கூடாது?
உலகில் ஒருவரும் புனிதமானவர்கள் இல்லை.எல்லோருமே தெரிந்தோ, தெரியாமலோ தவறுகளை செய்கிறார்கள்.
எனினும், பாவங்களை தெரிந்தும், தங்கள் சுயநலத்தின் நிமித்தம் கூச்சமின்றி தொடர்ந்து செய்துவரும் அரக்கர்களோடு ஒப்பிடும் போது செய்த தவறுகளை உணர்ந்து, வருந்தி, பாவ மன்னிப்பு கோரி, அதற்கான பரிகாரம் தேடும் மனிதர்கள் புனிதமானவர்கள்.
Post a Comment