Wednesday, February 16, 2011

நியூசிலாந்தில் ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் 8-வது உலக அதிசயம்

இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட 7 உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது 8-வது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இவை 60 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இவை 19-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமண “கேக்” வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886-ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த ஏரி நியூசிலாந்தின் ஜியோ தெர்மல் பகுதியில் உள்ள வடக்கு தீவில் அமைந்துள்ளது. இதை தண்ணீருக்குள் மூழ்கி பார்க்க அதி நவீன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com